தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!

விடாமுயற்சியும் மனவலிமையும் தன்னம்பிக்கையும் இல்லாமைதான் பலரது வாழ்வின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டைகள் ஆகிவிடுகின்றன.

News image
Updated On :2 மார்ச் 2013, 5:17 am

செவல்குளம் ஆச்சா

ஹெலன் கெல்லர்

முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை. விடாமுயற்சியும் மனவலிமையும் தன்னம்பிக்கையும் இல்லாமைதான் பலரது வாழ்வின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டைகள் ஆகிவிடுகின்றன.
 மன ஊனத்தால் மதி கெட்டு, நெறி கெட்டு, தடுமாறி, வழிமாறித் திரிகின்றவர்களுக்கு மத்தியில் உடல் ஊனமுற்ற போதிலும் மன உறுதியால், இலட்சிய உணர்வால் நம்பிக்கை என்ற ஊன்றுகோலின் துணையோடு வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடித்த சாதனையாளர்களின் வரலாறு மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, "அவர்களே சாதனை படைக்கும் போது நாம் ஏன் சாதிக்கக் கூடாது, என்று மற்றவர்களையும் சிந்திக்க வைக்கத் தூண்டுகோலாக
 அமையும்.
 அரியன ஆற்றுவதற்கு ஊனம் ஒரு தடையே இல்லை என்ற வைராக்கியத்துடன் ஏறுநடை போட்டு வாழ்வில் வெற்றிகண்டு வரலாறான சிலரின் வரலாற்றுச் சுருக்கங்கள்... இனி, வாரம்தோறும்.
 
 காது கேளாது; கண் பார்வை கிடையாது. இருப்பினும் தன்னால் முடியும் என்ற மன உறுதியாலும் விடாமுயற்சியாலும் வாழ்க்கையில் முன்னேறி, உலகம் போற்றும் சமூக சேவகியாகத் திகழ்ந்து, வரலாறு படைத்து ஊனமுற்றோரின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த பெண்மணி ஹெலன் கெல்லர்.
 உலக மக்கள் அனைவராலும் போற்றப்பட்டவர். காது கேளாதவர்கள், பார்வையற்றவர்கள் பேசமுடியாது. ஹெலன் கெல்லர் அந்தக் குறைபாட்டைத் தகர்த்து தனது கடும் முயற்சியால் பேசும் வல்லமை பெற்றவர். நான்கு மொழிகளில் பேசும் ஆற்றல் பெற்றவர். அந்தக்காலகட்டத்தில் காது கேளாத, பார்வையற்றவர்களில் உலகிலேயே அதிகம் படித்தவர் ஹெலன் கெல்லர் மட்டுமே!
 அவர் எப்படிப் படிக்க, பேசக் கற்றுக் கொண்டார் என்பதை இனி பார்ப்போம்.
 
 அமெரிக்காவில் அலபாமா என்ற மாநிலத்தில் உள்ள துஸ் கம்பியா என்ற ஊரில் 27-06-1880இல் ஹெலன் கெல்லர் பிறந்தார். அவர் பிறந்த போது, ஆரோக்கியமாகவே இருந்தார். பார்வையும் இருந்தது. காதுகளுக்கும் கேட்கும் திறன் இருந்தது. ஆனால் அவர் பிறந்த பத்தொன்பதாம் மாதத்தில் வந்த மூளைக் காய்ச்சல் அவருடைய பார்வையைப் பறித்துவிட்டது. காதையும் செவிடாக்கிவிட்டது.
 இந்நிலையில் உள்ள பிள்ளையை எப்படி வளர்த்து ஆளாக்குவது என்று அவருடைய பெற்றோரான ஆர்தர் எச் கெல்லர், கேட் ஆடம்ஸ் இருவரும் மிகவும் கவலை
 அடைந்தனர்.
 தனக்குள்ள குறைபாட்டை புரிந்து கொண்ட ஹெலன் கெல்லர் தனது சைகையாலேயே தனது தேவைகளை உணர்த்தத் தொடங்கினார். தானாகவே சைகை மொழியைக் கற்றுப் பிறருக்கும் உணர்த்தினார். வீட்டில் உள்ளவர்கள் நடக்கும் போது ஏற்படும் ஒலி அதிர்வுகள் வாயிலாகவும் அணிந்துள்ள ஆடைகளைத் தொட்டுப் பார்ப்பதன் மூலமும் அவர்களின் கைகளைப் பிடிப்பதாலும் குரல் மூலமும் அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பித்தார்.
 ஹெலன் கெல்லரின் பெற்றோர், தங்களின் குடும்ப நண்பரான டாக்டர் ஒருவரின் பரிந்துரையின்படி தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸôண்டர் கிரகாம்பெல்லின் உதவியை நாடினர்.
 அச்சமயம் கிரகாம் பெல் காது கேளாதவர்களுக்குப் பேசக் கற்றுக் கொடுத்துவந்தார். அவருடைய ஆலோசனைப்படி ஹெலன் கெல்லருக்குக் கற்றுக் கொடுப்பதற்காகத் தனியாக ஓர் ஆசிரியையை ஏற்பாடு செய்தனர். அந்த ஆசிரியையின் பெயர் அன்னி மான்ஸ் ஃபீல்டு ஸல்வன். அப்போது ஹெலன் கெல்லருக்கு வயது ஏழு.
 
 3-3-1887 ஹெலன் கெல்லரின் வாழ்வில்
 மறக்கமுடியாத நாள்! அன்றுதான் ஆனி ஸல்லிவன் அவர்களின் வீட்டிற்கு ஆசிரியையாக வந்தார். அவர்தான் ஹெலன் கெல்லர் எல்லா வகையிலும் மேன்மையுறுவதற்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவரை ஹெலன் கெல்லர் "டீச்சர்' என்றழைத்து மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வார்.
 ஆசிரியை ஆனி ஸல்லிவன் முதலில் ஹெலன் கெல்லரிடம் இருந்த அடங்காத கோபத்தைப் படிப்படியாக, மிகவும் பக்குவமாக மாற்றச் செய்தார். அடுத்து விரல்களின் உதவியால் சைகை மொழியைக் கற்றுத் தந்தார்.
 அவ்வாறு கற்றுக் கொடுப்பவரின் ஆட்காட்டி விரலே எழுதும் பேனாவாகப் பயன்பட்டது. ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டிக் கொண்டு, மற்ற விரல்களை மடக்கிவைத்துக் கொண்டு, சைகை மொழியைக் கற்றுக் கொள்பவரின் இடது கையில் உள்ள விரல்களைத் தொடவேண்டும்.
 எடுத்துக்காட்டாக அ என்ற ஆங்கில எழுத்தைத் தெரிவிக்க, கற்றுக் கொடுப்பவர் தனது ஆட்காட்டி விரலினால் கற்றுக் கொள்பவரின் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். உ என்னும் எழுத்துக்கு கற்றுக் கொள்பவரின் ஆட்காட்டி விரலின் நுனியைத் தொடவேண்டும். ஐ என்னும் எழுத்துக்கு நடுவிரலையும் ஞ என்னும் எழுத்துக்கு மோதிர விரலையும் ம என்னும் எழுத்துக்கு சுண்டு விரலையும் தொடவேண்டும்.
 இவ்வாறாக ஆங்கில எழுத்துக்கள் 26க்கும் தனித்தனியாக விரல்களையும் உள்ளங்கையையும் தொட்டுத் தொட்டு அந்தந்த குறிப்பிட்ட எழுத்தை உணரச் செய்ய வேண்டும்.
 இவ்வாறு விரல்களைத் தொடுவதன் மூலம் ஆங்கில எழுத்துக்களையும் சிறிய சிறிய வார்த்தைகளையும் ஹெலன் கெல்லருக்கு ஆனி ஸல்லிவன் கற்றுத் தந்தார். ஒவ்வொரு வார்த்தையையும் அதனோடு சம்பந்தப்பட்ட பொருளோடு தொட்டுப் பார்க்கச் செய்து உணரவைத்தார்.
 முதன் முதல் ஹெலன் கெல்லர் பொருளை உணர்ந்து கற்றுக்கொண்ட வார்த்தை ர-அ-ப-உ-த என்பதுதான்.
 (சாதனைகள் தொடரும்)
 

அந்தக்காலகட்டத்தில்
 காது கேளாத,
 பார்வையற்றவர்களில்
 உலகிலேயே
 அதிகம் படித்தவர்
 ஹெலன் கெல்லர்
 மட்டுமே!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.